Header Ads

Practical Test - Engineering Technology

 


Practical Test - Engineering Technology

ET-29.06.2022-09.07.2022

பொருளியில் தொழிநுட்ப பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைத் திட்டமிட்ட படி 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாடசாலைக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பரீட்சைக்கு 20910 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் 4009 மாணவர்கள் தமிழ் மொழி மூலமம் 31 மாணவர்கள் ஆங்கிலம் மூலமும் மொத்தமாக 24950 பேர் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 44 நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 610 மதிப்பீட்டாளர்கள் இதில் கடமையாற்றுகின்றனர். மொத்தமாக பரீட்சைக் கடமைகளில் 1540 பேர் ஈடுபடவுள்ளனர்.

இப்பரீட்சை நடைபெறாமல் க.பொ.த உயர்தரத்தின் 20-21 பெறுபேற்றை வெளியிடுவது மேலும் தாமதமடையும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார். இப்பரீட்சையை பிற்போடுவது எனத் தீர்மானித்தாலும் எவ்வளவு காலம் பிற்போடுவது என்ற பிரச்சினை தோன்றியுள்ளது. எனவே திட்டமிட்ட படி பரீட்சையை ஆரம்பித்து நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட தினத்தில் பயணம் செய்ய முடியாத தூரமாக இருப்பின் முன்னைய நாள் சரி பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தினத்தில் செல்ல முடியாத போது அடுத்த நாளிலேனும் நிலையத்திற்கு சென்று நிலைய பொறுப்பதிகாரிகளை சந்தித்து கலந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்து்ள்ளார். 

No comments

Powered by Blogger.