Header Ads

அடுத்த வாரம் நகர்புறப் பாடசாலைகளை நடாத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


அடுத்த வாரம் நகர்புறப் பாடசாலைகளை நடாத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2022 ஜூன் 27 முதல் ஜூலை 1 வரையிலான வாரத்தில் பாடசாலைகள் எவ்வாறு நடத்தப்படும் என கல்வி அமைச்சு செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதி வரையான வாரத்தில் பாடசாலைகளை நடத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, கடந்த வாரம் போன்று நாளை (27) முதல் ஜூலை 01 ஆம் திகதி வரையான வாரத்தில் மேல் மாகாணத்தின் கொழும்பு பிராந்தியத்திலும் அதனை அண்மித்த நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளையும் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 27 முதல் ஜூலை 1, 2022 வரையிலான வாரத்தில், கடந்த வாரம் நடைபெற்ற கிராமப்புறப் பாடசாலைகளைப் போல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்துச் சிக்கல் இருப்பின் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலைகள் நடைபெறும்.

மேலும், போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நாட்களில் பாடசாலைக்கு வராத ஆசிரியர்கள் தனியார் விடுமுறை தினமாக பதிவு செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

எவ்வாறாயினும், அந்த வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கௌரவ ஆளுநர்களுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தவணைப் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி ஆரம்பமான வாரத்தில் நடத்தப்படுமாயின், இரண்டு வாரங்களின் பின்னர் அந்தத் தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.