Header Ads

கிழக்கு மாகாணப் பாடசாலைகள் ஐந்து நாட்களும் வழமைபோன்று நடைபெறும்

 


கிழக்கு மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் ஐந்து நாட்களும் வழமைபோன்று நடைபெறும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். 

இது கிழக்கு மாகாண ஆளுனரின் தீர்மானமாகும் என தெரியவருகிறது.

மூன்று தினங்கள் மாத்திரம் நடைபெறும் என பரவும் செய்தி உண்மையில்லை  என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர்  எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு நகர்ப்புறப் பாடசாலைகளை ஐந்து நாட்களும் மூடுவதற்கும் கிராமப்புறப் பாடசாலைகளை நடாத்துவதில் சிரமங்கள் ஏற்படின் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகளை நடாத்துவதற்கும் தீர்மானித்து அறிவித்துள்ள பின்னணியில் கிழக்கு மாகாணம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடாத்த தீர்மானித்துள்ளது. 

பிற்பகல் வரை மூன்று நாட்கள் நடாத்துவதற்கான தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், மாலையில் இத்தீர்மானம் மாற்றப்பட்டு, ஐந்து நாட்களும ்பாடசாலை நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாண கல்வி வலயமொன்றின் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார். 

No comments

Powered by Blogger.